Connect with us

“Fight Club படத்தின் முதல் வார வசூல் இத்தனை கோடியா?!”

Cinema News

“Fight Club படத்தின் முதல் வார வசூல் இத்தனை கோடியா?!”

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவான ‘ஃபைட்கிளப்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மூன்றே நாட்களில் ஐந்தே கால் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ‘உரியடி’ விஜயகுமார் நடிப்பில் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஃபைட் கிளப்’.

இந்த படம் வெளியான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மூன்று நாட்களில் ஐந்தே கால் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இளைஞர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதாகவும் இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘உறியடி’ விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top