Connect with us

“விஜய் சேதுபதியின் 50ஆவது படமான மஹாராஜா படத்தின் ட்ரெய்லர் வேற லெவல்..! இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன விஷயம்!”

Cinema News

“விஜய் சேதுபதியின் 50ஆவது படமான மஹாராஜா படத்தின் ட்ரெய்லர் வேற லெவல்..! இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன விஷயம்!”

விஜய் சேதுபதி தற்போது மஹாராஜா, ட்ரெய்ன், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் மஹாராஜா விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை நிதிலன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. குரங்கு பொம்மை படம் மூலம் கவனிக்க வைத்த நிதிலனுக்கு விஜய் சேதுபதியே மஹாராஜா படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தாராம். விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, திவ்யா பாரதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகி வருகிறது மஹாராஜா. இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. மஹாராஜா படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மஹாராஜா படத்தின் ட்ரெய்லர் குறித்து இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் ஆகியோர் அப்டேட் கொடுத்துள்ளனர். இயக்குநர்கள் அருண்குமார், வெற்றிமாறன், அமீர், ஜெயம் ராஜா, நிதிலன் ஆகியோர் இணைந்து ஒரு பேட்டிக் கொடுத்திருந்தனர்.

அப்போது தான் மஹாராஜா ட்ரெய்லர் குறித்து வெற்றிமாறனும் அமீரும் பேசியிருந்தனர். அதில் மஹாராஜா ட்ரெய்லர் தாறுமாறாக வந்துள்ளதாகக் கூறினர். அதாவது மஹாராஜா ட்ரெய்லரை நிதிலன் போட்டுக் காட்டினார். அதனை பார்த்து மிரண்டுவிட்டேன் என வெற்றிமாறன் கூறியுள்ளார். அதேபோல் அமீரும் மஹாராஜா ட்ரெய்லர் தரமாக இருப்பதாக நிதிலனை பாராட்டியிருந்தார். இதனால் மஹாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு செம்ம கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், கேமியோ போன்ற ரோல்களில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. ஆனால், சமீபத்தில் பேசியிருந்த விஜய் சேதுபதி, இனி வில்லன் கேரக்டரில் நடிக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார். வில்லன் ரோலில் நாம் ரிஸ்க் எடுத்து நடிக்கும் காட்சிகள் ஹீரோவுக்காக எடிட் செய்யப்படுவதாக வேதனையுடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மீண்டும் ஹீரோவாக வெறித்தனமான கம்பேக் கொடுப்பார் எனவும், அதற்கு மஹாராஜா திரைப்படம் கை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top