Connect with us

இளையராஜாவுக்கு வனிதா பதிலடி: ‘அவர் வீட்டுக்கு மருமகளாக போக வேண்டியவள் நான்!

Uncategorized

இளையராஜாவுக்கு வனிதா பதிலடி: ‘அவர் வீட்டுக்கு மருமகளாக போக வேண்டியவள் நான்!

நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா தயாரித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற பழைய பாடலை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் இந்தப் பாடலை உடனே நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலைமை குறித்து நடிகை வனிதா விஜயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது உணர்ச்சி வெடிப்புடன் தனது வேதனையை பகிர்ந்தார். மக்கள் தன்னுடைய திரைப்படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என அழுதபடி கேட்டுக் கொண்டார். மேலும், இசைஞானி இளையராஜாவுக்கும் வனிதா கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “இளையராஜாவிடம் இந்தப் பாடலை பயன்படுத்த தனிப்பட்ட முறையில் பேசினேன். என் மகளுடன் சென்று அவர் காலில் விழுந்தேன். அவர் ‘ஓகே’ என்றுதான் சொன்னார். அதன் பிறகு சோனி நிறுவனத்திடமும் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றேன்,” என வனிதா கூறினார்.

“நான் நேரில் சென்று கேட்டபோது திட்டியிருக்கலாமே. இப்போ வந்து வழக்குப்போடுறீங்களே?” என்று வனிதா கடுமையாக விமர்சித்தார். மேலும், இளையராஜா குடும்பத்துடன் தனது நெருங்கிய உறவைப் பற்றியும் வனிதா உணர்ச்சியுடன் கூறினார். “சிறுவயதிலிருந்தே அவர் வீட்டில்தான் நான் வளர்ந்தேன். அந்த வீட்டுக்கு நான் மருமகளாக போக வேண்டியவள்,” என்றார். தற்போது இவ்விவகாரம் சமூக வலைதளங்களிலும் திரையுலகத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான மேலும் விரிவான தகவல்களுக்கு இணைந்திருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss 9: "நீங்க செய்தது தப்புதான்" – கம்ருதீனை எதிர்த்து ஒருங்கிணையும் ஹவுஸ்மேட்ஸ்!

More in Uncategorized

To Top