Connect with us

“தெளிவற்ற சென்சர் முடிவுகள் திரையுலகை பாதிக்கின்றன: கமல் ஹாசன்”

Cinema News

“தெளிவற்ற சென்சர் முடிவுகள் திரையுலகை பாதிக்கின்றன: கமல் ஹாசன்”

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன், தற்போதைய திரைப்பட சென்சர் முறையில் உடனடி மாற்றம் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். சமீப காலங்களில் பல படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களும், தெளிவற்ற முடிவுகளும் கலைஞர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் படைப்பாற்றலையும் கடுமையாக பாதிக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக சமூகக் கருத்துக்களை பேசும் படங்கள் அதிகமாக தடைகள் சந்திப்பது, சினிமாவை ஒரு சுயாதீனக் கலை வடிவமாக முன்னேற விடாமல் தடுத்து நிறுத்துகிறது என்றும் கமல் கூறியுள்ளார்.

மேலும், திரைப்படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கும் போது தெளிவான விதிமுறைகள், காரணங்களுடன் கூடிய முடிவுகள் மற்றும் காலவரையறைக்குள் செயல்படும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இப்படிப்பட்ட மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் திரைப்படத் தொழில்துறை பெரிய நிதி இழப்புகளையும், படைப்புச் சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கலைஞர்களின் சுதந்திரமும் பார்வையாளர்களின் கருத்து அறியும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ஜனநாயகன் தாமதம்: விஜய் ரசிகர்களிடம் தயாரிப்பாளர் மன்னிப்பு – வெளியீட்டுக்கு தடையாகிய சென்சார் சிக்கல்”

More in Cinema News

To Top