Connect with us

“தனது வாழ்நாள் ஆசை இதுதான்..! என்ன இப்படி சொல்லிட்டாரே?! நடிகர் துல்கர் சல்மான் சொன்ன கருத்து!”

Cinema News

“தனது வாழ்நாள் ஆசை இதுதான்..! என்ன இப்படி சொல்லிட்டாரே?! நடிகர் துல்கர் சல்மான் சொன்ன கருத்து!”

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், தற்போது பான் இந்தியா நடிகராக மிரட்டி வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில்.. சினிமா, வெப் சீரிஸ்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம், சூப்பர் ஹிட்டானது. அதேபோல், இந்தியில் குலாப் கஞ்ச் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழில் அடுத்தடுத்து இரண்டு மெகா ஸ்டார்களுடன் இணையவுள்ளார் துல்கர் சல்மான்.

அதன்படி, சூர்யாவின் 43வது படத்திலும், கமல்ஹாசனின் 234வது படத்திலும் துல்கர் சல்மான் கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சூர்யா 43 படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளார். கமலின் 234வது படமான தக் லைஃப்-ஐ மணிரத்னம் இயக்குகிறார். நாயகன் படத்தைத் தொடர்ந்து 36 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி தற்போது இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து படத்தின் டைட்டில் தக் லைஃப் என அறிவித்த படக்குழு, அதில், த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதையும் கன்ஃபார்ம் செய்தது.

ஓ காதல் கண்மணி படத்துக்குப் பின்னர் மணிரத்னத்துடன் இணைகிறார் துல்கர் சல்மான். தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் கேரக்டர் செம்ம மாஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தக் லைஃப் படம் பற்றியும், அதில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பது குறித்தும் மனம் திறந்துள்ளார் துல்கர் சல்மான். வாழ்வின் நீண்ட நாள் ஆசை தக் லைஃப் படத்தில் நிறைவேற இருப்பதாகவும், கமல் சாருடன் நடிப்பதை பெருமையாக நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், தனது இன்னொரு வாழ்நாள் ஆசை என்பது, தந்தை மம்முட்டியுடன் நடிப்பது தான் எனவும் துல்கர் சல்மான் விருப்பம் தெரிவித்துள்ளார். அப்பாவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை அவரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டதாகவும், ஆனால், அவர் நேரம் அமையும் போது பார்க்கலாம் எனக் கூறிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் கமலுடன் இணைந்து நடிப்பதை விட, மம்முட்டியுடன் ஸ்க்ரீனில் வர வேண்டும் என்பதே துல்கரின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top