Connect with us

“இது அநியாயம்! கெமியை வெளியேற்றிய பிக் பாஸ், முடிவு சர்ச்சை!”

bigg boss

Cinema News

“இது அநியாயம்! கெமியை வெளியேற்றிய பிக் பாஸ், முடிவு சர்ச்சை!”

விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் வலுவான போட்டியாளராக இருந்த கெமி திடீரென எலிமினேட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “இது அநியாயம்! அன்ஃபேர் எலிமினேஷன்!” என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபத்துடன் பதிவிட்டு, கெமியை மீண்டும் கொண்டு வாருங்கள் என பிக் பாஸ் குழுவிடம் தொடர்ந்த கோரிக்கை வைத்துள்ளனர்.

இதே நேரத்தில், வீக்கெண்டில் வீட்டிற்குள் நுழைந்த விஜய் சேதுபதி, சாண்ட்ரா, திவ்யா, பிரஜன் ஆகியோருக்கு கடும் கேள்விகளை எழுப்பி “வறுத்தெடுத்த” காட்சிகள் வைரலாகின. குறிப்பாக பிரஜனின் நடத்தை குறித்து அவர் எடுத்துக்காட்டிய விஷயங்கள் ரசிகர்களை மேலும் பதற்றப்படுத்தின.

எலிமினேஷன் நேரத்தில் பிரஜன் போவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், சவாலை நேரில் எதிர்கொள்ளும் கெமி வெளியேறிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கெமி ஒரு பெரிய படத்தில் நடிக்க வேண்டிய கமிட்மென்ட் காரணமாக வெளியேற்றப்பட்டாரா என்ற சந்தேகமும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💥🎞️ 30 Years of Bombay! ரசிகர்களை மீண்டும் நினைவுகளில் மூழ்கடிக்கும் விழா!

More in Cinema News

To Top