Connect with us

‘அமரன்’ படத்தில் சாய் பல்லவி கதாபாத்திரத்தின் சிறப்பு வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

‘அமரன்’ படத்தில் சாய் பல்லவி கதாபாத்திரத்தின் சிறப்பு வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள அமரன் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தரமாகி தயாராகி உள்ள திரைப்படமே அமரன்.

குடும்ப நாயகன் எஸ்.கே கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் .

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ள நிலையில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிடுக்கான ராணுவ வீரராக நம்ப எஸ்.கே நடிக்க முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

இப்படம் தீபாவளி அன்று கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் தற்போது சாய் பல்லவியின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வங்கதேச அணிக்கு எதிரான முதல் T20 போட்டி - இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top