Connect with us

அட்வான்ஸ் மட்டும் வாங்கிட்டு நடிக்காம இருந்தா எப்படி – நடிகர் தனுஷ்க்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்..!!

Cinema News

அட்வான்ஸ் மட்டும் வாங்கிட்டு நடிக்காம இருந்தா எப்படி – நடிகர் தனுஷ்க்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்..!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் தனுஷை வைத்து புதிய திரைப்படங்களின் பணிகளைத் தொடங்குவதற்கு முன் தங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பார்கள் ங்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாள சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சநிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விதியோகர்சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கீழ்கண்ட நிமானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வேரங்களுக்கு பிறகே OTT- தனங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் முகமனதாக தியானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்றதயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள், இதனால், ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாணிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேரி முடிக்கப்பட்டது.

நடிகர் திரு தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தயாரிப்பார்கள் நடிகர் திருதனுவஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பார்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top