Connect with us

“பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வசூலை தொட்ட LEO படம்..! தளபதி விஜய்யின் வெறித்தனமான செய்கை!”

Cinema News

“பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வசூலை தொட்ட LEO படம்..! தளபதி விஜய்யின் வெறித்தனமான செய்கை!”

விஜய் – லோகேஷ் கனகராஜ் காம்போ, சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம், LUC ஜானர் படம் என லியோவின் மார்க்கெட் வேல்யூ ஏகத்துக்கும் எகிறியது. இதனால், கோலிவுட்டில் முதல் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் சாதனையை லியோ படைக்கும் என சினிமா விமர்சகர்கள் அடித்துக் கூறினர். இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸான லியோவுக்கு முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைத்தது.

ஆனால், நெகட்டிவான விமர்சனம், ட்ரோல்கள் என லியோவுக்கு கட்டம் விபூதி அடித்தனர் நெட்டிசன்கள். கதை, திரைக்கதை, மேக்கிங் என மொத்தமாக சொதப்பிய லோகேஷ், மூடநம்பிக்கை என்ற கான்செப்ட்டை கொண்டு வந்து லியோவை பங்கம் செய்துவிட்டார். இதனால் அதிக எதிர்பார்ப்பில் படம் பார்த்த ரசிகர்கள், விட்டா போதும் என தெறித்து ஓடினர். இதெல்லாம் ஒருபக்கம் இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் லியோவின் வசூல் தாறுமாறாக இருந்தது.

முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்த லியோ, அடுத்தடுத்த நாட்களிலும் ஓரளவு நியாயமாக கலெக்‌ஷன் செய்தது. அதேநேரம் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு வாய்ப்பில்லை என்பதும் உறுதியானது. இந்நிலையில் லியோ திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 600 ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தமிழ்நாட்டில் மட்டும் 215 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

ஆகஸ்ட் மாதம் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் 600 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் படக்குழு தரப்பில் வெளியிட்ட கடைசி அபிஸியல் அப்டேட்டில் 525 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஜெயிலர் வசூலை லியோ தாண்டிவிட்டது என விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதேபோல், லியோ பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து அபிசியல் அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top