Connect with us

தளபதி விஜய் நடிக்கும் ‘GOAT’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?! லேட்டஸ்ட் தகவல்!

Cinema News

தளபதி விஜய் நடிக்கும் ‘GOAT’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?! லேட்டஸ்ட் தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’GOAT’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’GOAT’ படத்தின் அடுத்தடுத்த படப்படிப்புகள் எங்கெங்கே நடைபெற உள்ளன என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது.

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் அடுத்தகட்டமாக ’GOAT’ படக்குழுவினர் இலங்கை செல்ல இருப்பதாகவும், இலங்கையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ராஜஸ்தான் செல்ல இருப்பதாகவும் அதனை அடுத்து இஸ்தான்புல் செல்ல இருப்பதாகவும் தெரிகிறது.

மேற்கண்ட மூன்று இடங்களிலும் படப்பிடிப்பு முடித்த பின்னர் மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பிறகு மீண்டும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “‘கர்ணன்’ கூட்டணி மீண்டும்! 😍 | Mari Selvaraj & Dhanush New Film with A.R. Rahman 🎶”

More in Cinema News

To Top