Connect with us

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி..! தலைவர் ரஜினிகாந்த் பகிர்ந்த Tweet!

Cinema News

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி..! தலைவர் ரஜினிகாந்த் பகிர்ந்த Tweet!

இந்திய சினிமாவின் டாப் ஹீரோவான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூலித்தது. ஜெயிலருக்கு முன்னதாக வெளியான இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் சோர்வடைந்திருந்த ரஜினி ஜெயிலர் ஹிட்டால் ஜாலி மூடுக்கு சென்றார்.

ரஜினியின் 73ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டிதான் வேட்டையன் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. பலரும் படத்துக்கும் அவரக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிச்சாமி, O.பன்னீர் செல்வம், அண்ணாமலை, சந்திரபாபு நாயுடு மற்றும் என்னை வாழ்த்திய என்னுடைய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும்.., நண்பர் கமலஹாசன், இளையராஜா, வைரமுத்து, S.P.முத்துராமன், ஷாருக்கான் மற்றும் கலையுலகத்தை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்.

சச்சின் டெண்டுல்கர்,சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்.., அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும்.., என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்… உழைப்பு:- “பொழுதைப் போக்கும்! வறுமையை நீக்கும்!! உடலினை காக்கும்” “உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவம்பர் 6-ல் தேர்தல் சின்னம் கேட்டு டெல்லி செல்கிறார் விஜய்! எந்த சின்னத்தில் களம்?

More in Cinema News

To Top