Connect with us

தீடிரென தூத்துக்குடி வந்த தலைவர் ரஜினிகாந்த்! இதுதான் காரணமா?!

Cinema News

தீடிரென தூத்துக்குடி வந்த தலைவர் ரஜினிகாந்த்! இதுதான் காரணமா?!

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை மற்றும் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காகவும் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடி வந்துள்ளார்.

மேலும் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்டோர்களுடன் அவர் ஆலோசனை செய்யவுள்ளார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இன்று தூத்துக்குடி வருகை தந்துள்ளார். அவர் நடித்துக் கொண்டிருக்கும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தூத்துக்குடியில் நடைபெற இருப்பதை அடுத்து அவர் தூத்துக்குடி வந்து இருப்பதாக தெரிகிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பதும் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top