Connect with us

“விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்ட ரஜினி, உடனடியாக செய்த செயல்! Viral!”

Cinema News

“விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்ட ரஜினி, உடனடியாக செய்த செயல்! Viral!”

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டதும் உடனடியாக ’வேட்டையன்’ படத்தின் இன்றைய படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் மற்றும் புரட்சி கலைஞர் விஜயகாந்த் இன்று காலை காலமான நிலையில் அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. அங்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தூத்துக்குடியில் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது அவருக்கு விஜயகாந்த் மரணம் குறித்த தகவல் தெரிந்தது. உடனடியாக அவர் இன்றைய படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்ப உள்ளதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் அவர் சென்னை திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் நேராக அவர் தேமுதிக தலைமை அலுவலகம் சென்று விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் விஜயகாந்த் உடல் தகன நிகழ்விலும் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருப்பதாக அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top