Connect with us

சூர்யாவின் தரமான பிறந்தநாள் பரிசு – ‘கங்குவா’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!!

Cinema News

சூர்யாவின் தரமான பிறந்தநாள் பரிசு – ‘கங்குவா’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் முதல் சிங்கள் பாடலான “Fire” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் சூர்யாவின் அசுர நடிப்பில் உருவாகி ரிலீசுக்காக வெய்ட்டிங்கில் உள்ள திரைப்படம் தான் கங்குவா . ‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இப்படத்தை UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

வரலாற்று கதைக்களம் கொண்ட இப்படத்தில் கதையின் நாயகனாக சூர்யா நடிக்க அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார் . மேலும் இவர்களுடன் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று தனது 49வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கங்குவா படக்குழு தற்போது படத்தின் முதல் சிங்கள் பாடலான “Fire” பாடலை வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ – சென்னையில் புதிய படப்பிடிப்பு தொடக்கம்

More in Cinema News

To Top