Connect with us

“சூர்யா 45, கருப்பு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு – வக்கீல் லுக் வைரல்!”

Cinema News

“சூர்யா 45, கருப்பு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு – வக்கீல் லுக் வைரல்!”

ரெட்ரோ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் 45வதுபடம் ‘கருப்பு’, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சென்று கொண்டிருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரிஷா–சூர்யா ஜோடி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படத்தில் சூர்யா ஒரு வக்கீலாக, தீவிரமான கதாப்பாத்திரத்தில் தோன்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

தற்போது ‘கருப்பு’ படத்தின் இறுதி ஷூட்டிங் EVP Film Cityயில் வேகமாக நடைபெற்று வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியீட்டு தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த படம் பொங்கல் 2026 வெளியீட்டுக்காக லாக் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘தலைவர் 173’ அப்டேட்: ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப்? ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

More in Cinema News

To Top