Connect with us

2026-ல் திரையரங்கில் புயல்… அதற்கு முன் ஓடிடியில் வரலாறு படைக்கும் பராசக்தி

Cinema News

2026-ல் திரையரங்கில் புயல்… அதற்கு முன் ஓடிடியில் வரலாறு படைக்கும் பராசக்தி

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் பராசக்தி தற்போது திரை வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. மதராஸி படத்தைத் தொடர்ந்து வெளியாகும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்க, ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார்.

அதர்வா, ஸ்ரீலீலா, ராணா, பேசில் ஜோசப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 2026 ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது.

சிவகார்த்திகேயன் படங்களுக்கு எப்போதும் ப்ரீ-பிசினஸ் நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில், பராசக்தி அந்த பட்டையை மேலும் உயர்த்தியுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் ரூ.52 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் ஓடிடி உரிமைக்கு அதிக தொகைக்கு விற்பனையான திரைப்படமாக பராசக்தி அமைந்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல் ஹிந்தி படம் வருவதற்கு முன்பே 3 பாலிவுட் படங்கள் – ஸ்ரீலீலாவின் அசுர வேக வளர்ச்சி 🔥🎬

More in Cinema News

To Top