Connect with us

“சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆகிறதா? இல்லையா?! குழப்பத்தில் ரசிகர்கள்!”

Cinema News

“சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆகிறதா? இல்லையா?! குழப்பத்தில் ரசிகர்கள்!”

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் எதுவும் நடைபெறாததால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் வெளிநாடுகளில் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் பெங்களூரில் கூட முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் நேற்று செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து இந்த படம் உறுதியாக வெளியாகும் என்று ரசிகர்களை எதிர்பார்த்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்னும் முன்பதிவு தொடங்காமல் இருப்பது ரசிகர்களுக்கு மேலும் சந்தேகத்தை வரவழைத்துள்ளது.

அது மட்டுமின்றி பெங்களூரில் தொடங்கிய முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியாகுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மம்மூட்டி–மோகன்லால் போஸ்டர்! Morse Code-ல் ரிலீஸ் தேதி 🔥

More in Cinema News

To Top