Connect with us

தலைமறைவாக இருக்கும் நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு..!!

Cinema News

தலைமறைவாக இருக்கும் நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு..!!

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசி கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தெலுங்கு மக்கள் குறித்து அவதூறான கருத்துக்களையும் பேசினார்.

நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்யமுயன்றபோது அவர் தப்பித்து தற்போது தலைமறைவாக உள்ளார் .

நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து எழும்பூர் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதியப்பட்டு அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் கஸ்தூரி தற்போது வரை கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top