Connect with us

கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை….ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம் – நடிகர் சூரி இரங்கல்

Cinema News

கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை….ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம் – நடிகர் சூரி இரங்கல்

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூரி தனது இரங்கலை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சூரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :

கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை….ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம்… மாமனிதன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எளியவர்கள் எல்லாருக்கும் பசி போக்கும் அன்னச்சத்திரமா இருந்துச்சு!

தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை விஜயகாந்த் சாரின் புகழ் இருக்கும்! கேப்டனின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் சூரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top