Connect with us

சிவகார்த்திகேயனின் சம்பள முடிவு — வெங்கட் பிரபுவுக்கு ஆதரவா?

Cinema News

சிவகார்த்திகேயனின் சம்பள முடிவு — வெங்கட் பிரபுவுக்கு ஆதரவா?

வெங்கட் பிரபுவின் புதிய படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைத்தாரா? — இதுதான் தற்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்படும் ஹாட் டாபிக்.

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக ரசிகர்களின் இதயத்தை வென்றவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராஸி திரைப்படத்தில் நடித்திருந்த அவர், அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் அவரது அடுத்த படமாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்புகள் முடிவடைந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 அன்று படம் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு டான் புகழ் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்திலும், பின்னர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வெங்கட் பிரபு படத்திற்காக, சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ரூ. 65 கோடி சம்பளத்தை ரூ. 40 கோடியாகக் குறைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல்வன் நேர்காணல் காட்சி: அர்ஜுனும் ரகுவரனும் உருவாக்கிய சினிமா வரலாறு

More in Cinema News

To Top