Connect with us

மதுபோதையில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய பாடகர் வேல்முருகன் கைது..!!

Cinema News

மதுபோதையில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய பாடகர் வேல்முருகன் கைது..!!

மதுபோதையில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் பிரபல பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் மதுபோதையில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வளசரவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த நிலையில் மதுபோதையில் மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேல்முருகன் மெட்ரோ ரயில் உதவி மேலாளர் வடிவேலு என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது .

இதையடுத்து இச்சம்பவம் குறித்து வடிவேலு போலீசில் புகார் கொடுக்க பாடகர் வேல்முருகனை கைது செய்த போலீசார் அவரை காவல்நிலைய ஜாமினில் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுபோதையில் அளப்பறையில் ஈடுபட்ட வேலுமுருகன் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top