Connect with us

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது STR48 படக்குழு

Cinema News

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது STR48 படக்குழு

நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘STR48’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ராஜ்கமல் ஃப்ளிம்ஸ் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்புவின் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பத்து தல.

இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக STR 48 படத்தில் நடித்து சசிம்பு மும்மரமாக நடித்து வருகிறார்.

தேசிங் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படம் வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் என்றும் அதற்காக தனது லுக்கை நடிகர் சிம்பு மாற்றிக்கொண்டு வருகிறார் என்பதை நாம் அனைவருமே பார்த்து வருகிறோம்..

மிக பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்று கூடி நடித்து வரும் இப்படம் இரு பாகங்களாக உருவாகி வருவதாகவும் ஒருபக்கம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இபபடம் குறித்த அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு அப்டேட் கொடுத்துள்ளது.

அந்த அப்டேட் என்னவென்றால் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 2ம் தேதி இன்று ‘STR48’ படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ராஜ்கமல் ஃப்ளிம்ஸ் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

அந்த போஸ்டரில் இரண்டு சிம்புஇருப்பது போல் தெரிவதால் ஒரு வேலை இதும் சிம்புவின் டபுள் ஆக்சன் திரைப்படமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தின் Sneak Peek வீடியோ வெளியானது..!!

More in Cinema News

To Top