Connect with us

சிம்பு–வெங்கட் பிரபு மாநாடு 4வது ஆண்டு! வசூல் ரிப்போர்ட் மீண்டும் டிரெண்டிங்!

Cinema News

சிம்பு–வெங்கட் பிரபு மாநாடு 4வது ஆண்டு! வசூல் ரிப்போர்ட் மீண்டும் டிரெண்டிங்!

இயக்குநர் வெங்கட் பிரபு – சிம்பு கூட்டணிக்கான அதிரடி கம்பேக் படமாக திகழ்ந்தது மாநாடு. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை பேசவைத்தது. குறிப்பாக இடைவேளைக்குப் பின் அவர் கொடுத்த திகில்–த்ரில்லான நடிப்பு இன்னும் கூட நினைவில் நிற்கிறது.

எஸ்.ஏ. சந்திரசேகர், YG மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளம் கதைக்கே ஏற்றபடி பிரமாண்டமாக இணைந்திருந்தது. வித்தியாசமான கான்செப்டும், வெங்கட் பிரபுவின் நேர்த்தியான திரைக்கதையும் காரணமாக, 2021-ல் வெளியான மாநாடு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று ப்ளாக்பஸ்டர் ஆனது.

இன்று படம் வெளிவந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எக்ஸ்-ல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதை விட முக்கியம் — அப்போது மாநாடு எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா? உலகளாவிய வசூல்: ரூ. 88 – 90 கோடி இதன் மூலம் 2021ஆம் ஆண்டின் Top 5 Highest Grossing Tamil Films பட்டியலில் மாநாடு சேர்ந்து சாதனை படைத்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ஆஸ்கார் 2026 பந்தயத்தில் இந்திய படங்கள் – ‘காந்தாரா’ மற்றும் ‘தான்வி தி கிரேட்’ சாதனை”

More in Cinema News

To Top