Connect with us

🎬 தனுஷ் இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் கைகோர்க்கும் ஷண்முக பாண்டியன்!

Cinema News

🎬 தனுஷ் இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் கைகோர்க்கும் ஷண்முக பாண்டியன்!

நடிகர் விஜயகாந்தின் மகனான ஷண்முக பாண்டியன், நடிகர் தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை ஷண்முக பாண்டியனின் தாயாரும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது ஷண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொம்புசீவி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி அவரது திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பு சிக்கல்களால் தாமதமான ‘அதிர்ஷ்டசாலி’ திரைப்படத்திற்குப் பிறகு, மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கும் அடுத்த படமாக இது உருவாக உள்ளதால், இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் விஜயின் ‘ரெட்ட தல’ – இரட்டை வேடம், இருண்ட உலகம்… வெளியான டார்க் தீம்

More in Cinema News

To Top