Connect with us

Grammy Awards 2024 : கிராமி விருது வென்றது சங்கர் மகாதேவன் இசைக்குழு

Zakir_Hussain_Shankar_Mahadevan

Cinema News

Grammy Awards 2024 : கிராமி விருது வென்றது சங்கர் மகாதேவன் இசைக்குழு

66வது கிராமி விருது விழாவில் இந்தியாவின் பிரபல பாடகர்களான ஜாகிர் உசேன் மற்றும் சங்கர் மகாதேவன் அடங்கிய இசைக்குழு விருது வென்றுள்ளது.

இசைக் கலைஞர்களுக்கான ஆஸ்கார் விருது என வர்ணிக்கப்படும் கிராமி விருது, ஆண்டுதோறும் பல்வேறு இசைப் பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. இதில் சிறந்த உலகளாவிய இசை ஆல்பம் பிரிவில் இந்த முறை இந்தியாவின் ஃபியூஷன் இசைக்குழுவான சக்தி விருதை கைப்பற்றியுள்ளது.

ஜாகிர் உசேன் மற்றும் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்த குழுவில் வி.செல்வகணேஷ் மற்றும் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோரும் பங்காளித்துள்ளனர். கிராமி விருது விழாவில் சங்கர் மகாதேவன், அவரது குழு உறுப்பினர்கள் மற்றும் ஜாகீர் உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்கள் விருது வென்ற பிறகு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தும், வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தீபாவளிக்கு ஒன்றாக களமிறங்கும் அமரன் - Bloody Beggar - வெளியான தாறுமாறு தகவல்..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top