Connect with us

ஜெயிலர் 2ல் ஷாருக் கான் அவுட்! பவன் கல்யாண் என்ட்ரி – மாஸ் கூட்டணி ரெடி! 🔥

Cinema News

ஜெயிலர் 2ல் ஷாருக் கான் அவுட்! பவன் கல்யாண் என்ட்ரி – மாஸ் கூட்டணி ரெடி! 🔥

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் “ஜெயிலர் 2” படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் நிலையில், படத்தைச் சுற்றியுள்ள தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்த படத்தில் முக்கிய கெஸ்ட் ரோலில் ஷாருக் கான் நடிப்பார் என்று பேசப்பட்டாலும், தற்போது அவர் தனது “King” படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் லுக் மாற்ற முடியாமல் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை புரிந்துகொண்ட ரஜினியும் அந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக தற்போது அந்த ரோலில் பவன் கல்யாண் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை வைத்து முக்கிய காட்சிகளும் ஏற்கனவே படமாக்கப்பட்டதாக கூறப்படுவதால், இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரஜினியின் மாஸ் ஸ்டைலுக்கும் பவன் கல்யாணின் பவர் என்ட்ரிக்கும் இடையிலான இந்த கூட்டணி திரையில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பே தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 “ஜிகர்தண்டா 3” ரெடி ஆகுது… கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட அதிரடி அப்டேட்!

More in Cinema News

To Top