Connect with us

டூரிஸ்ட் பேமிலி டைட்டில் டீசர்: சசிகுமார், சிம்ரன் இணைந்து வித்தியாசமான கதை..

Uncategorized

டூரிஸ்ட் பேமிலி டைட்டில் டீசர்: சசிகுமார், சிம்ரன் இணைந்து வித்தியாசமான கதை..

சசிகுமார் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களின் ஹீரோவாகவும் இயக்குநராகவும் பிரபலமானவர். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் நாடோடிகள், தாரை தப்பட்டை, சுந்தரபாண்டியன், வெற்றிவேல், மற்றும் அயோத்தி போன்ற படங்கள் அவரை பிரபலமாக்கின.

இந்த ஆண்டு நந்தன் மற்றும் கருடன் போன்ற படங்களில் சசிகுமாரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, அவர் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி என்ற புதிய படம் உருவாகியுள்ளது. இதில், சசிகுமாருடன் பிரபல நடிகை சிம்ரன் இணைந்து நடித்து இருக்கிறார்.

இந்த படத்தில் இலங்கை தமிழர்கள் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர், மேலும் அதன் டைட்டில் டீசர் இலங்கை தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 36 மில்லியன் லைக்ஸால் இணையத்தை குலுக்கிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமண பதிவு!

More in Uncategorized

To Top