Connect with us

அதிரடி போலீஸ் அவதாரத்தில் சாய் தன்ஷிகா – ‘யோகிடா’ எப்படி?

Cinema News

அதிரடி போலீஸ் அவதாரத்தில் சாய் தன்ஷிகா – ‘யோகிடா’ எப்படி?

சாய் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ள யோகிடா முழுக்க பெண் மைய ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சாய் தன்ஷிகா, அடிக்கடி இடமாற்றம் பெறும் சூழலில் சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு பொறுப்பேற்கிறார். அந்தப் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொலை, அடிதடி, போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் தாதா கபீர் சிங்குடன் அவருக்கு நேரடி மோதல் உருவாகிறது. மத்திய அமைச்சராக இருக்கும் அண்ணனின் அரசியல் ஆதரவுடன் வில்லன் அராஜகம் செய்து வர, அதற்கு தன்ஷிகா எவ்வாறு பதிலடி கொடுக்கிறார் என்பதே படத்தின் மையக் கதை.

அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு சாய் தன்ஷிகா கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிராப் ஹேர்ஸ்டைல், மிடுக்கான தோற்றம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் உடல் மொழி பாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக டூப் இல்லாமல் நடித்துள்ள சண்டை காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. பெண் மைய ஆக்ஷன் படமாக உருவாக்க முயற்சி செய்துள்ள இயக்குநர் கவுதம் கிருஷ்ணா, விஜயசாந்தி படங்களை நினைவூட்டும் பாணியில் படத்தை எடுத்துள்ளாலும், கதை மற்றும் திரைக்கதை வழக்கமான போலீஸ்–வில்லன் பாதையிலேயே பயணிப்பது ஒரு குறையாகக் காணப்படுகிறது. பூபதியின் ஒளிப்பதிவு மற்றும் கணேஷ் குமாரின் சண்டை அமைப்பு படத்திற்கு பலம் சேர்க்க, தீபக் தேவின் இசையில் பாடல்கள் சராசரி ரகமாக அமைந்துள்ளன. மொத்தத்தில், சாய் தன்ஷிகாவின் அதிரடி நடிப்பே ‘யோகிடா’ படத்தின் முக்கிய ஈர்ப்பாக விளங்குகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜி.வி. பிரகாஷின் ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ டிரெய்லர் வெளியீடு

More in Cinema News

To Top