Connect with us

ரூ.60 கோடி ப்ரீ-புக்கிங்! தி ராஜா சாப் வசூலில் அதிரடி தொடக்கம்

Cinema News

ரூ.60 கோடி ப்ரீ-புக்கிங்! தி ராஜா சாப் வசூலில் அதிரடி தொடக்கம்

பாகுபலி படத்திற்குப் பிறகு பான்-இந்தியா நட்சத்திரமாக கொண்டாடப்படும் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள தி ராஜா சாப் இன்று ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் மாஸாக வெளியாகியுள்ளது. மாருதி இயக்கத்தில், பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் உருவான இந்த படம் ஹாரர்-ரொமான்ஸ்-காமெடி கலந்த முழு எண்டர்டெய்னராக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. பிரபாஸின் காமெடி டைமிங், ஆக்ஷன் சீன்கள், மற்றும் ஹாரர் டச்—all-in-one அனுபவமாக படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

வெளியீட்டுக்கு முன்பே இப்படம் ப்ரீ-புக்கிங்கிலேயே ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி, பிரபாஸின் ஸ்டார் பவரையும் ரசிகர் ஆதரவையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மேலும், குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒரே நேரத்தில் கவரும் வகையில் படம் உருவாகியுள்ளதால், வரும் நாட்களில் வசூல் இன்னும் உயரும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🏠 துபாயில் செட்டிலாகிறாரா சிவகார்த்திகேயன்? வைரலாகும் தகவல்

More in Cinema News

To Top