Connect with us

என் தனிப்பட்ட வாழ்வு குறித்து வரும் அவதூறு வீடியோக்களை உடனே நீக்குக – ஏ.ஆர்.ரகுமான் காட்டம்..!!

Cinema News

என் தனிப்பட்ட வாழ்வு குறித்து வரும் அவதூறு வீடியோக்களை உடனே நீக்குக – ஏ.ஆர்.ரகுமான் காட்டம்..!!

என் தனிப்பட்ட வாழ்வு குறித்து வரும் அவதூறு வீடியோக்களையும் பதிவுகளையும் உடனே நீக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு தம்பதி பரஸ்பர விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இவர்களின் இந்த விவாகரத்து சம்பவம் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வரும் நிலையில் தனது தந்தை மற்றும் தாய் குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு அமீன் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் என் தனிப்பட்ட வாழ்வு குறித்து வரும் அவதூறு வீடியோக்களையும் பதிவுகளையும் உடனே நீக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்களை கொண்ட சமூக ஊடக பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். அப்படி அவதூறு பதிவுகள், வீடியோக்களை நீக்காவிட்டால் சட்டபூர்வமாக வழக்கு தொடரப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top