Connect with us

🔥 டிராகன் இயக்குநருடன் ரஜினி கூட்டணி – அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்

Cinema News

🔥 டிராகன் இயக்குநருடன் ரஜினி கூட்டணி – அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளில் தற்போது முழு கவனம் செலுத்தி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்தப் படத்தை முடித்த பிறகு தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்ட நிலையில், இறுதியாக ‘டிராகன்’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒகே சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.https://www.instagram.com/reel/DS4lwJzkgDK/

இந்த புதிய படம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ளதுடன், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஜினி – அஸ்வத் மாரிமுத்து இடையே பலமுறை நடந்த கதை ஆலோசனைகளுக்குப் பிறகு, இறுதி கதையை ரஜினி மிகவும் விரும்பியதால் உடனடியாக சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது, இதனால் படத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆர்யாவுடன் நடிக்க விருப்பமில்லை – நடிகை அபர்ணதி ஓபன் டாக்

More in Cinema News

To Top