Connect with us

“விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் Glimpse! அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!”

Cinema News

“விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் Glimpse! அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!”

இயக்குனர் ராம் இயக்கத்தில் சூரி முக்கிய கேரக்டரில் நடித்த ’ஏழு கடல் ஏழு மலை’ என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில் இந்த படம் ரோட்டர்டாம் உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பெயரில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்தநிலையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்கிரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகியிருப்பதை அறிவித்தனர்.

இதை சாத்தியமாகிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவினை சிறப்பாகக் கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும், படத்திற்கு மிக பக்கபலமாக நின்ற ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமாருக்கும், ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டன்ட் சில்வா மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம், என்றனர்.

இந்தநிலையில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகிற ஜனவரி 2ஆம் தேதி ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ மாலை 5:01 மணிக்கு வெளியாகும் என்ன அறிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top