Connect with us

அப்பாவானார் பிரேம்ஜி அமரன்- வீட்டில் புதிய செல்வம்!

Cinema News

அப்பாவானார் பிரேம்ஜி அமரன்- வீட்டில் புதிய செல்வம்!

நடிகர் பிரேம்ஜி அமரன் கடந்த ஆண்டு இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த விஷயம். இந்து–பிரேம்ஜி ஜோடியின் திருமணத்தை இயக்குனர் வெங்கட் பிரபு முன் நின்று நடத்தி வைத்தார். திருமணத்திற்குப் பிறகு பிரேம்ஜி தன்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் கொண்டு வந்து, குடும்பம் மற்றும் கரியர் என இரண்டிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

கங்கை அமரனின் இரண்டாவது மகனான பிரேம்ஜி, வெளிநாட்டில் இசை படித்துவிட்டு யுவன் ஷங்கர் ராஜாவிடம் பணியாற்றினார். அவரின் நடிப்பு திறமையை கண்ட சிம்பு, அவரை நடிகராக அறிமுகப்படுத்தினார். அப்போதிருந்து வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தொடர்ச்சியாக நடிப்பது வழக்கமாகி விட்டது.

அதே நேரத்தில் இசையமைப்பாளராகவும் பிரேம்ஜி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். நெஞ்சத்தை கிள்ளாதே, என்னமோ நடக்குது, கசடதபற, ஆர்.கே.நகர், பார்ட்டி உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதில் பார்ட்டி படம் மட்டும் இன்னும் வெளியீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் கோவா படத்துக்கான பின்னணி இசையையும் பிரேம்ஜியே அமைத்தது குறிப்பிடத்தக்கது.

பிரேம்ஜியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்தால், அவர் கடைசிவரை சிங்கிளாகவே இருந்து விடுவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் சோஷியல் மீடியா வாயிலாக இந்துவுடன் ஏற்பட்ட அறிமுகம் விரைவில் காதலாக வளர்ந்து, வீட்டிலிருந்தே உடனடி சம்மதம் கிடைத்தது. பின்னர் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து, திருத்தணியில் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்ட கோலாகல திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் பிரேம்ஜி முழுவதும் மாறி, பார்ட்டி, இரவில் தாமதமாக வீடு திரும்புவது போன்ற பழக்கங்களை எல்லாம் விட்டுவிட்டு, பொறுப்பான குடும்பஸ்தனாக வாழத் தொடங்கினார். குடும்பம் மற்றும் தன்னுடைய கரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த இந்துவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். தந்தையாகிப் புது அனுபவத்தில் உள்ள பிரேம்ஜிக்கு திரைப்பட உலகினர், ரசிகர்கள், உறவினர்கள் என பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை வல்லமை பட இயக்குனர் கருப்பையா முருகன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிமாறன் – அனிருத் டீல் வைரல்: சம்பளமில்லை… ஆடியோ ரைட்ஸ் மட்டும்!

More in Cinema News

To Top