Connect with us

துருவ் விக்ரமுடன் கைகோர்க்கும் ப்ரேமம் பட நடிகை – வெளியான டக்கர் அறிவிப்பு

Cinema News

துருவ் விக்ரமுடன் கைகோர்க்கும் ப்ரேமம் பட நடிகை – வெளியான டக்கர் அறிவிப்பு

நடிகர் விக்ரமின் மகனும் தமிழ் சினிமாவின் இளம் ஹீரோவான துருவ் விக்ரமுடன் கைகோர்க்கும் ப்ரேமம் பட நடிகை புதிய படத்தில் இணைந்துள்ளதாக டக்கரான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் துருவ் விக்ரம்.இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மகான்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து துருவ் விக்ரம் இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகி உள்ளார் .

கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக துருவ் விக்ரம் தற்போது முறையான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் .

இந்நிலையில் இப்படம் குறித்து வேறு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது . அது என்னவென்றால் இப்படத்தின் படத்தின் கதாநாயகியாக நடிக்க நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகி உள்ளார்.

பா. ரஞ்சித் மற்றும் Applause நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது வந்துள்ள இந்த தகவல் சினிமா ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித் – 2027 வரை அட்டவணை வெளியீடு!

More in Cinema News

To Top