Connect with us

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது – கல்வி விருது 2.0வில் த.வெ.க தலைவர் விஜய் அனல் பறக்கும் பேச்சு..!!

Cinema News

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது – கல்வி விருது 2.0வில் த.வெ.க தலைவர் விஜய் அனல் பறக்கும் பேச்சு..!!

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் ஒரே நாடு ஒரே பாடம் ஒரே கல்வி என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது எனவும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் விருது வழங்கி பாராட்டி வருகிறார்.

அந்தவகையில் இந்த ஆண்டு கல்வி விருதுக்கு தேர்வான மாணவ மாணவிகளை இரண்டாக பிரித்து விருது வழங்கி வருகிறார் .

இந்நிலையில் கல்வி விருது முதல் பாகம் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இந்த விருது விழாவின் இரண்டாம் பாகம் நடைபெற்று வருகிறது .

சென்னை திருவான்மியூரில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவுக்கு வருகை தந்த விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேசினார் :

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை தான் முழு மனதுடன் ஏற்கிறேன். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கிராமப்புற பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர்.

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் ஒரே நாடு ஒரே பாடம் ஒரே கல்வி என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.

சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தைத் மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும் . கல்வி, சுகாதாரத்தில் மாநில அரசுகளுக்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும்.

மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு NCERT முறையில் தேர்வு வைத்தால் எப்படிச் சரியாக இருக்கும் மத்திய அரசால் நடத்தப்படும் இந்த தேர்வில் தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளில் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என விஜய் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top