Connect with us

5 மொழிகளில் வெளியாகவிருக்கும் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ திரைப்படம்!

Cinema News

5 மொழிகளில் வெளியாகவிருக்கும் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ திரைப்படம்!

மம்முட்டி நடித்து வரும் ‘பிரம்மயுகம்’ படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ராகுல் சதாசிவன் இயக்குகிறார்.

இதில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சேஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

“கேரள மண் சார்ந்த கதையைக் கொண்ட படமாக இது இருக்கும். திகில் படம் என்றாலும் மம்மூட்டி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக இருக்கும்.

இதை அற்புதமான திரைப்பட அனுபவமாக மாற்றுவதற்காகத் தயாரிப்பாளர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்கிறார் இயக்குநர். இந்தப் படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top