Connect with us

“மம்மூட்டிக்கு ஜோடியான ஜோதிகா நடித்த காதல் தி கோர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!”

Cinema News

“மம்மூட்டிக்கு ஜோடியான ஜோதிகா நடித்த காதல் தி கோர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!”

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான கன்னூர் ஸ்குவாட் படம் சக்கைப் போடு போட்டு வரும் நிலையில், அடுத்ததாக தியேட்டர் ரசிகர்களுக்காக இந்த படத்தை இறக்கி சிக்ஸர் அடித்துள்ளார்.

இந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கொத்தா திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், பேக் டு பேக் ஹிட் படங்களை 72 வயதில் நடிகர் மம்மூட்டி கொடுத்து சாதனை படைத்து வருகிறார். குறைவான பட்ஜெட்டில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து வரும் மம்மூட்டியின் அடுத்த சூப்பரான படைப்பு காதல் தி கோர் திரைப்படம்.

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடித்துள்ளார் நடிகை ஜோதிகா. முதல் முறையாக மம்மூட்டிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள இந்த படம் அவருக்கு மலையாளத்திலும் ரசிகர் வட்டத்தை அதிகரித்து விடும் என்றே தெரிகிறது. மஞ்சு வாரியர் தமிழில் கலக்கி வரும் நிலையில், ஜோதிகா மலையாளத்தில் மாஸ் காட்டி வருகிறார்.

மம்மூட்டி ஒரு லெஜண்ட் என சும்மாவா சொன்னார்கள், அது உண்மை தான் என்றும் மம்மூட்டியும் ஜோதிகாவும் சும்மா போட்டிப் போட்டு இந்த படத்தில் நடித்து தள்ளி உள்ளதாக ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேத்யூவாக மம்மூட்டியும், ஓமணாவாக ஜோதிகாவும் இந்த படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் கதை, இயக்கம் அருமை. 5க்கு 4 ரேட்டிங் கொடுக்கலாம் தரமான படைப்பு என விமர்சித்துள்ளனர்.

More in Cinema News

To Top