Connect with us

பிக் பாஸ் தமிழ் 9-க்கு எதிராக சென்னை மாநகரில் பெரிய அளவில் போராட்டம்!

Cinema News

பிக் பாஸ் தமிழ் 9-க்கு எதிராக சென்னை மாநகரில் பெரிய அளவில் போராட்டம்!

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னை நகரில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களின் நெறி, பண்பாடு மற்றும் குடும்ப மதிப்புகளை கெடுக்கும் வகையில் உள்ளது எனக் கூறி, நிகழ்ச்சியை தடை செய்ய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் விதம், மற்றும் நிகழ்ச்சியில் காட்டப்படும் சில நடத்தை, உரையாடல்கள், உடல்மொழிகள் ஆகியவை குடும்பத்துடன் பார்க்க இயலாததாக உள்ளன என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.



இந்த போராட்டத்தில் கட்சித் தலைவர் வெள்முருகன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடைபெறும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டி அருகே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கூறியதாவது: “பிக் பாஸ் நிகழ்ச்சி நமது சமூகத்தின் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் சிதைக்கிறது. அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆயிரக்கணக்கான பெண்களுடன் பெரிய அளவில் மறுபடியும் போராட்டம் நடத்துவோம்.” இந்நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி மற்றும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் இதுகுறித்து இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “விஜய்-க்கு நல்லதே நினைப்பேன்” – அஜித் குமாரின் மனிதநேயம் மிளிரும் பேச்சு ❤️

More in Cinema News

To Top