Connect with us

“காமெடியன் தாடி பாலாஜி இப்படிப்பட்டவரா..! KPY பாலா சொன்ன ஷாக்கிங் விஷயங்கள்!”

Cinema News

“காமெடியன் தாடி பாலாஜி இப்படிப்பட்டவரா..! KPY பாலா சொன்ன ஷாக்கிங் விஷயங்கள்!”

KPY பாலா முன்னணி நடிகர்களுக்கு கூட இல்லாத அளவுக்கு பெரிய மனசுடன் செயல்பட்டு வருவது மக்களால் பாராட்டப்பட்டு வந்தாலும், சிலர் பாலா ஏதோ ஃபிராடு செய்கிறார் என்பதை போலவே விமர்சிக்க ஆரம்பித்து வருகின்றனர். மேலும், அவருக்கு பின்னணியில் அரசியல் சப்போர்ட் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

சமீபத்தில் அவரிடம் நீங்க எந்த கட்சியில இருக்கீங்க என்றே ஒரு செய்தியாளர் கேட்க தெருக்கட்சியில தான் இருக்கேன் என மூக்கை உடைத்து விட்டார். இங்கே நல்லது செய்தாலும் அதை ட்ரோல் பண்ணுபவர்கள் தான் அதிகம் என்பதாலே பல நடிகர்களும் அமைதி காத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

ஆம்புலன்ஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தருவது, மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் செலவு செய்து உதவி செய்வது என KPY பாலா குட்டி ஹீரோவாக பெரிய மனம் கொண்டவராக மாறி வரும் நிலையில், அவருக்கே தாடி பாலாஜி உதவி செய்திருப்பதாக பாலாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் நல்ல துணி கூட போட்டுக்க இல்லாமல் இருந்த தனக்கு தனது நண்பர் ஒருவரை போய் சந்திக்க தாடி பாலாஜி அண்ணா சொன்னார். அவரிடம் போனால் ஒரு பை நிறைய புதிய துணிகளை தாடி பாலாஜி கொடுக்க சொன்னதாக சொல்லிக் கொடுத்தார்.

விஜய் டிவியில் இருக்கும் போது தாடி பாலாஜி அண்ணா எனக்கு செய்த உதவி தான் நாமும் காசு வந்தால் சேர்த்துக்கிட்டே போகக் கூடாது என்றும் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் நல்லா இருக்கலாம் என என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2025 IMDb ஹிட் லிஸ்ட்: ரஜினிகாந்தின் ‘கூலி’ அசத்தல்

More in Cinema News

To Top