Connect with us

‘கோச்சடையான்’ பட வழக்கு, நேரில் ஆஜரான லதா ரஜினிகாந்த்..! லேட்டஸ்ட் தகவல்!

Cinema News

‘கோச்சடையான்’ பட வழக்கு, நேரில் ஆஜரான லதா ரஜினிகாந்த்..! லேட்டஸ்ட் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’கோச்சடையான்’ திரைப்பட த்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நிறுவனத்தின் முரளி என்பவர் ஆட் பீரோ என்ற நிறுவனத்திடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தார்.

இந்த கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்து போட்டிருந்தார். இந்த நிலையில் 6.2 கோடி ரூபாய் கடன் வாங்கிய முரளி அந்த பணத்தை கட்டாததால் உத்தரவாத கையெழுத்து போட்டா லதா ரஜினிக்கு சிக்கலாக மாறிவிட்டது.

அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் லதா மீது போடப்பட்டிருந்த மூன்று பிரிவுகளை ரத்து செய்தது. இருப்பினும் இன்னும் சில பிரிவுகள் இருப்பதை எடுத்து லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது .

இதனை அடுத்து பெங்களூர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜரான நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top