Connect with us

🔥 ஜோதிகா பாராட்டு மழை – ‘தாய் கிழவி’ படம் சமூக முன்னேற்றத்தின் புதிய அடையாளம்!

Cinema News

🔥 ஜோதிகா பாராட்டு மழை – ‘தாய் கிழவி’ படம் சமூக முன்னேற்றத்தின் புதிய அடையாளம்!

நடிகை ஜோதிகா சமீபத்தில் வெளியான “தாய் கிழவி” படத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் மனமார்ந்த பதிவை பகிர்ந்துள்ளார். பெண்மையின் வலிமை மற்றும் சமூக முன்னேற்றத்தை அழகாக எடுத்துக்காட்டும் இப்படம் மிகுந்த மனநிறைவை அளித்ததாக அவர் குறிப்பிட்டார். இயக்குநர் சிவகுமார் முருகேசன் தனது முதல் படத்திலேயே முக்கியமான சமூகச் செய்தியை நகைச்சுவை மற்றும் மரியாதையுடன் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது என ஜோதிகா தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தனது நட்சத்திர சக்தியை பயன்படுத்தி பெண்மையை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு ஆதரவு அளித்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக, நடிகை ராதிகா சரத்குமார் நடித்த ‘தாய் கிழவி’ கதாபாத்திரம் சக்தி, அறிவு மற்றும் நகைச்சுவையின் கலவையாக இருந்ததாகவும், அவரது உடல் மொழி, குரல் மாறுபாடு மற்றும் நடிப்பு சிறு சிறு வெளிப்பாடுகள் ரசிகர்களை கவர்ந்ததாகவும் அவர் பாராட்டினார். இந்த படம் ஒரு பெண் மையப்படமாக மட்டும் அல்லாமல், சமுதாயத்தையும் தமிழ்ச் சினிமாவையும் முன்னேற்றும் படமாக திகழ்கிறது என ஜோதிகா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா – அமீர் இணைப்பு… கோலிவுட்டில் புதிய பரபரப்பு! 🎬

More in Cinema News

To Top