Connect with us

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரலை ரத்து? வெளியான புதிய தகவல்

Cinema News

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரலை ரத்து? வெளியான புதிய தகவல்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த விழா, வழக்கமான இசை வெளியீட்டு நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், விஜய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.

இதில் 85,500 பேர் அமர்ந்து நிகழ்ச்சியை காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், விஜயின் திரை வாழ்க்கையில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய முன்னணி பின்னணி பாடகர்கள் கலந்துகொண்டு பாட உள்ளனர். இதற்கான முன்னோட்ட வீடியோக்களும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடர்ந்து வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழா நேரலையில் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேரலை ஒளிபரப்பு இருக்காது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதனால் பல விஜய் ரசிகர்கள் சற்று வருத்தம் அடைந்துள்ளனர். இருப்பினும், நிகழ்ச்சி முடிந்த சில நாட்களுக்குப் பிறகு வழக்கம்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  70 நாட்கள் பிக்பாஸ் பயணம்… வியானா மற்றும் ரம்யா ஜோ சம்பளம் குறித்து வைரல் தகவல்

More in Cinema News

To Top