Connect with us

சொத்துகளை தானம் செய்த ஜாக்கி சான்.. மகன் சொன்ன வார்த்தை உலகையே கவர்ந்தது!

Cinema News

சொத்துகளை தானம் செய்த ஜாக்கி சான்.. மகன் சொன்ன வார்த்தை உலகையே கவர்ந்தது!

உலகப் புகழ் பெற்ற ஆக்ஷன் நடிகர் ஜாக்கி சான் — தனது வாழ்க்கை முழுவதும் டூப் போட்டு உயிரை பணயம் வைத்து நடித்தவர். அதிகமான காயங்களையும், மருத்துவ சிகிச்சைகளையும் தாண்டியும், கலைக்காக வாழ்ந்தவர்.

சமீபத்தில், அவர் சம்பாதித்த ரூ. 3000 கோடி மதிப்பிலான முழு சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கிய செய்தி சர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்றது. “பணம் இருந்தும் இப்படிப் பட்ட மனசு எல்லாருக்கும் வராது” என்று ரசிகர்களும் சமூக வலைதள பயனாளர்களும் புகழ்ந்தனர்.

இந்த முடிவை குறித்து தனது மகன் ஜேசி சான் என்ன நினைக்கிறார் என்ற கேள்விக்கு, ஜாக்கி சான் பதில் அளித்தார். “நான் சொத்துகளை தானமாக வழங்கியதாக மகனிடம் கூறியபோது, ‘இதில் உனக்கு ஏமாற்றமா?’ என்று கேட்டேன். அதற்கு ஜேசி, ‘நானும் எனது திறமையால் உழைத்து முன்னேற விரும்புகிறேன். நான் வாரிசு என்பதற்காக உங்கள் செல்வத்தைப் பெறுவதில் எனக்கு எந்த அர்த்தமும் தெரியவில்லை’ என்று நேராக பதிலளித்தான்.”

ஜாக்கி சான் இந்த அனுபவத்தை பகிர்ந்தபோது, உலகம் முழுவதும் “உழைப்பே உண்மையான செல்வம்” என்ற எண்ணத்தை பலரும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தளபதி vs சிவகார்த்திகேயன்.. பராசக்தி டீம், ஜன நாயகன்-னை சீண்டிய சர்ச்சை?

More in Cinema News

To Top