Connect with us

இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சி – ‘ராமாயணா’ டீசர் ரசிகர்களை அதிர வைத்தது!

Cinema News

இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சி – ‘ராமாயணா’ டீசர் ரசிகர்களை அதிர வைத்தது!

இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. Namit Malhotra தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில், Ranbir Kapoor ராமராகவும், Sai Pallavi சீதையாகவும், Yash ராவணனாகவும் நடித்து வருகின்றனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்திற்கு, ஒவ்வொரு பாகத்திற்கும் சுமார் ரூ.2000 கோடி செலவிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மொத்தமாக ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த முயற்சி, இந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹனுமான் ஜெயந்தி நாளை முன்னிட்டு ராமர் கதாபாத்திரத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான இந்த டீசரில் காணப்படும் பிரம்மாண்ட காட்சிகள், மேம்பட்ட காட்சியமைப்பு மற்றும் விஸ்வல் எஃபெக்ட்ஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரைப்படம் வெளியாகும் முன்பே இந்த அளவிற்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘ராமாயணா’, இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைக்கும் படமாக மாறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “வெற்றி தொடரில் ‘யூத்’… 12 நாட்களில் ₹55 கோடி வசூல் சாதனை! 🔥”

More in Cinema News

To Top