Connect with us

திரையரங்குகளில் நாளை கமல்ஹாசனின் இந்தியன் 2 – ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடி வசூலா..?

Cinema News

திரையரங்குகளில் நாளை கமல்ஹாசனின் இந்தியன் 2 – ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடி வசூலா..?

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் சுமார் 28 வருடங்களுக்கு பின் உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன் 2 பல போராட்டங்களை கடந்து 6 வருடங்களாக தரமாக தயாரான இப்படம் வரும் 12 ஆம் தேதி ( நாளை ) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் மீண்டும் இந்தியன் தாத்தாவாக வரும் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்துள்ளது . இதுமட்டுமின்றி இப்படத்தில் முதன்முறையாக ஷங்கருடன் இணைந்து ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  38 வயதில் சமந்தாவின் சொத்துக்களின் அளவு என்ன தெரியுமா?

More in Cinema News

To Top