Connect with us

‘மகான் 2’க்கு ஐடியா ரெடி – 2027/28ல் ரிலீஸ்? கார்த்திக் சுப்பராஜ் முக்கிய அறிவிப்பு! 🎬🔥

Cinema News

‘மகான் 2’க்கு ஐடியா ரெடி – 2027/28ல் ரிலீஸ்? கார்த்திக் சுப்பராஜ் முக்கிய அறிவிப்பு! 🎬🔥

விக்ரம் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ‘மகான் 2’ தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது, ‘மகான் 2’ உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அதற்கு அவர், “இரண்டாம் பாகத்திற்கான ஐடியா இருக்கிறது. அதை முழுமையாக எழுத வேண்டும். அனைத்தும் சரியாக அமைந்தால் 2027 அல்லது 2028ஆம் ஆண்டில் வெளியீட்டை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான ‘மகான்’ திரைப்படம், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்த அப்பா–மகன் மோதலை மையமாகக் கொண்டு உருவாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அதன் தொடர்ச்சி குறித்து இயக்குநர் அளித்துள்ள இந்த தகவல், இரண்டாம் பாகம் குறித்து அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘மகான் 2’ அதிகாரப்பூர்வமாக தொடங்குமா, எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்ற கேள்விகள் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 ரூ.50 கோடி சம்பளம்… முன்னணி நட்சத்திர வரிசையில் அதிரடி உயர்வு பெற்ற பிரதீப் ரங்கநாதன்!

More in Cinema News

To Top