Connect with us

எந்த தந்தை குறித்து வரும் வதந்திகளால் மனமுடைகிறேன் – ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் உருக்கம்..!!

Cinema News

எந்த தந்தை குறித்து வரும் வதந்திகளால் மனமுடைகிறேன் – ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் உருக்கம்..!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு தம்பதி பரஸ்பர விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் தனது பெற்றோர் குறித்து வரும் வதந்திகளால் மனமுடைந்திருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகனும் இசையமைப்பாளருமான அமீன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

என் தந்தை ஒரு லெஜெண்ட். திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் மட்டுமல்ல, இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட். ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதை பார்க்கும்போது மனமுடைகிறது.

ஒருவரின் வாழ்க்கையை பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை மதித்து அதனை காக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே என அமீன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top