Connect with us

🚨 “Fraud Alert” – பொய்யான குற்றச்சாட்டுகளை சாடிய ராகுல் ப்ரீத் சிங்

Cinema News

🚨 “Fraud Alert” – பொய்யான குற்றச்சாட்டுகளை சாடிய ராகுல் ப்ரீத் சிங்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் குறித்து சமூக வலைதளங்களில் ஒருவர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு, அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய சம்பவத்திற்கு, ராகுல் ப்ரீத் சிங் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அந்த நபர் பழைய மற்றும் சமீபத்திய புகைப்படங்களை ஒப்பிட்டு, போடாக்ஸ், ஃபில்லர் உள்ளிட்ட சிகிச்சைகள் செய்ததாக கூறியதை அவர் முற்றிலும் மறுத்துள்ளார். இதற்கு பதிலளித்து தனது சமூக வலைதளப் பதிவில், இத்தகைய தகவல்கள் உண்மையற்றவை மட்டுமல்லாமல், பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்றும் குறிப்பிட்டு “Fraud Alert” என வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தனது உடல் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொண்ட உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் விளைவாகவே ஏற்பட்டவை என்றும், எந்தவிதமான பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இணையத்தில் தங்களை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு பொய்யான தகவல்களை பரப்புபவர்களை நம்ப வேண்டாம் என்றும், உண்மை இல்லாத வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகளின் மனநிலை பாதிக்குமோ? விவாகரத்து வதந்திகள் குறித்து அபிஷேக் பச்சனின் தந்தை மனக்கவலை ❤️

More in Cinema News

To Top