Connect with us

திருச்சிற்றம்பலத்தால் கிடைத்த முதல் தேசிய விருது – நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி..!!

Cinema News

திருச்சிற்றம்பலத்தால் கிடைத்த முதல் தேசிய விருது – நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி..!!

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, நடிகை நித்யா மேனன் உணர்ச்சி பொங்க நெகிழ்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இதுகுறித்து நித்திய மேனன் வெளியிட்டுள்ள உணர்ச்சிகர பதிவில் கூறிருப்பதாவது :

திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக எனது முதல் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. பார்ப்பதற்கு எளிமையாக தெரியும் நடிப்பிற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல என புரிந்துகொண்ட தேசிய விருது தேர்வுக்குழுவிற்கு நன்றி.

சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ, அதிகரிப்போ, செயற்கையாக உடலை மாற்றிக்கொள்வதிலோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சித்து வருகிறேன்.

இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ் என எங்கள் 4 பேருக்கான விருது. ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிகைக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை.

உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் ஒரு இடத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினம். இன்னும் நிறைய படங்கள் சேர்ந்து பண்ணலாம் என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top