Connect with us

Fight Club படத்தின் 2வது நாள் Box Office Report இதோ..!

Cinema News

Fight Club படத்தின் 2வது நாள் Box Office Report இதோ..!

கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். அதன்படி அவரது G Squad நிறுவனம் தயாரித்துள்ள முதல் படம் ஃபைட் கிளப். அவரது அஸிஸ்டெண்ட் அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள ஃபைட் கிளப் இந்த வாரம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

‘உறியடி’ பிரபலம் விஜய்குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். வட சென்னையை பின்னணியாக வைத்து மீண்டும் ரத்தம் சொட்ட சொட்ட கேங்ஸ்டர் ஜானர் படமாக வெளியாகியுள்ள ஃபைட் கிளப். ட்ரெய்லரில் மட்டுமே கவனம் ஈர்த்த ஃபைட் கிளப், தியேட்டரில் வெளியானதும் நெகட்டிவான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

அளவுக்கதிகமான வன்முறை காட்சிகளுடன் உருவாகியுள்ள ஃபைட் கிளப் படத்தில், எல்லா கேரக்டர்களும் கஞ்சா, சிகரெட், மது என ரொம்பவே நெகட்டிவாக கிரியேட் செய்யப்பட்டுள்ளது என ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அதேபோல், கதை, திரைக்கதை போன்றவையும் ரசிக்கும்படி இல்லை என்றும், கோவிந்த் வசந்தா பின்னணி இசை மட்டுமே படத்திற்கு பலம் சேர்த்துள்ளது எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஃபைட் கிளப் திரைப்படம் இரண்டாவது நாளில் 1.92 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது முதல் நாளை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் 2 கோடி ரூபாய் வசூலித்த ஃபைட் கிளப், சனிக்கிழமையான நேற்று மோசமான நிலைக்கே சென்றுள்ளது.

இந்த வாரம் ஃபைட் கிளப் உடன் அதிக படங்கள் ரிலீஸாகாத நிலையில், சோலோவாக வந்தும் பாக்ஸ் ஆபிஸில் படுத்துவிட்டதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் படங்கள் மட்டுமின்றி, தயாரிக்கும் படத்திலும் வன்முறை காட்சிகளை அதிகம் வைப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நிலம் வழியாக அல்ல, வானில் வழியாக பறக்கப் போகும் TVK தலைவர் விஜய்

More in Cinema News

To Top